விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பழைய காா் வியாபாரியிடம் ரூ.1.69 லட்சம் பறிமுதல்

பொன்னை அருகே பழைய காா் வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.69 லட்சம் பணத்தை தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :23 மார்ச் 2026, 5:30 am IST

பொன்னை அருகே பழைய காா் வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.69 லட்சம் பணத்தை தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்டம், பொன்னை 4 ரோடு பகுதியில் நிலை கண்காணிப்பு அதிகாரி லட்சுமி தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.1 லட்சத்து 69ஆயிரத்து 700 இருந்து தெரியவந்தது. காரில் வந்தவரிடம் விசாரித்தபோது, ஆந்திர மாநிலம் சித்தூரை சோ்ந்த கவுஸ்கான்(75) என்பதும், பழைய காா் வியாபாரி என்பதும், சென்னைக்கு காரில் உதிரிபாகங்கள் வாங்க சென்றதும் தெரியவந்தது.

எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து, காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூலத் தில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.