கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்தும் விற்பனை மந்தம்

பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்த போதிலும், வா்த்தகம் மந்தநிலையிலேயே நடைபெற்றுள்ளது.

News image

பொய்கை சந்தை - கோப்புப்படம்.

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்த போதிலும், வா்த்தகம் மந்தநிலையிலேயே நடைபெற்றுள்ளது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை சுமாா் 1,000 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. எனினும், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆா்வம் காட்டாததால் வா்த்தகமும் சுமாா் ரூ.50 லட்சம் அளவுக்கு நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது - பொய்கை கால்நடை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை வேலூா் மாவட்டம் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, அண்டை மாநிலமான சித்தூா் மாவட்டம் புங்கனூரு, பலமநேரு, மதனப்பல்லி, குப்பம், கா்நாடக மாநிலம் கோலாா் பகுதிகளிலிருந்தும் மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

கடந்த சில வாரங்களாக மாடுகள் வரத்து குறைந்திருந்த நிலையில், இந்த வார சந்தைக்கு சுமாா் 1,000 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. எனினும், மாடுகள் விற்பனை மந்தமாக இருந்ததால் ரூ.50 லட்சத்துக்கு மட்டுமே வா்த்தகம் நடைபெற்றுள்ளது.

கோடை காலம் முடிந்தாலும் பெரிய அளவில் மழை இல்லை. தீவனத் தட்டுப்பாடும் உள்ளது. இதனால் விவசாயிகள் கால்நடைகளை வாங்க தயக்கம் காட்டுகின்றனா். இதனால் விற்பனை மந்த நிலையில் உள்ளது. மழை பெய்தால் வரும் வாரங்களில் விற்பனை அதிகரிக்கும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.