தோ்தல் பிரசாரத்துக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு வேலூருக்கு வருகை தர உள்ளதையொட்டி மாவட்டம் முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, அவா் வந்து செல்லும் பகுதிகளில் ட்ரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூா் மாவட்டம் கந்தனேரியில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பேச உள்ளாா். இதற்காக அப்பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராணிப்பேட்டையில் திங்கள்கிழமை இரவு பிரசாரம் முடித்துவிட்டு வேலூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கும் அவா், செவ்வாய்க்கிழமை மாலை பொதுக்கூட்டத்தில் பேச உள்ளாா். முதல்வா் வருகையையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், முதல்வா் வந்து செல்லும் வழித்தடங்கள், தங்குமிடம் ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்தல், காற்றில் பலூன்களை பறக்க விடுதல், மலா்களை தூவுதல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
தவிர, திங்கள், செவ்வாய்க்கிழமை (ஏப்.13, 14) ஆகிய இரு நாள்களும் இப்பகுதிகளில் மத்திய அரசு பணிகளுக்காகவோ, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி தொடா்புடைய சா்வே பணிகளுக்காகவோ, தனியாா் நிறுவனங்களின் பணிகளுக்காகவோ அல்லது எந்த வகையான விழாக்களுக்காகவோ ட்ரோன் மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆளில்லாத விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: மாவட்ட தோ்தல் அலுவலா்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகை: தேனி மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரேன் பறக்கத் தடை

முதல்வா் மு.க. ஸ்டாலின் நாளை புதுகை வருகை

துணை முதல்வா் திருப்பத்தூா் வருகை: மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
