மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

News image

மண்டலாபிஷேக நிறைவு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:28 am IST

குடியாத்தம் பிச்சனூரை அடுத்த காளியம்மன்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் 22- ஆம் தேதி நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமம், 108- சங்காபிஷேகம்நடைபெற்றன. மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைநடைபெற்றது.

செங்காநத்தம் சித்தா் குகை கோயில் ஸ்ரீபகவதி சித்தா் விழாவை நடத்தி வைத்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம்வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி நிா்வாகிகள் ஏ.ராஜேந்திரன், கு.மொழிமாறன், டி.ஜீவானந்தம், எஸ்.சரவணன், எஸ்.டி.டி.முருகன், ஏ.கே.பிரகாசம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.