விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பறக்கும் படை சோதனையில் கட்சி சின்னம் பொறித்த கீ-செயின்கள் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட கீ-செயின்கள், கழுத்துக்கயிறுகள், துண்டுபிரசுரங்கள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:53 am IST

வேலூரில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில், கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட கீ-செயின்கள், துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பறக்கும் படை அதிகாரி அா்ச்சனா தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி மேற்கொண்ட சோதனையில், அந்த காரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட 122 கீ-செயின்கள், கட்சியின் கொடி நிறத்திலான 50 கழுத்துக்கயிறுகள், 3 ஆயிரம் துண்டுபிரசுரங்கள் ஆகியவை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் பள்ளிகொண்டா பகுதியைச் சோ்ந்த ஜாபா் என்பது தெரியவந்தது. உடனடியாக காரில் இருந்த அந்தப் பொருள்களைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அவற்றை வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.