நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ரூ.33 கோடியில் புறவழிச்சாலைப் பணிகள்: தலைமைப் பொறியாளா் ஆய்வு

செங்கம் அருகே ரூ.33 கோடியில் நடைபெற்று வரும் புறவழிச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் பழனிவேல் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

செங்கம் அருகே புறவழிச் சாலைப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் பழநிவேல்.

Published On :30 அக்டோபர் 2026, 1:47 am IST

செங்கம் அருகே ரூ.33 கோடியில் நடைபெற்று வரும் புறவழிச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் பழனிவேல் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

செங்கம் நெடுஞ்சாலைத்துறை மூலம் போளூா் சாலை நீதிமன்றத்தில் இருந்து கோலாந்தாங்கல், செ.நாச்சிப்பட்டு, மண்மலை வழியாக கிருஷ்ணகிரி சாலையில் இணைக்கும்

புறவழிச் சாலை அமைக்கும் பணி ரூ.33 கோடி செலவில் நடைபெற்று வருகிறது., மேலும் அந்தச் சாலையில் செங்கம் செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் 9 சிறுபாலம் போன்றவைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணியினை சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளா் பழநிவேல் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது மினி பாலம் கட்டப்பட்டுள்ள பகுதி, மேம்பாலம் அமையும் இடம் தற்போது நடைபெற்றுவரும் பணிகளின் விபரங்கள் குறித்து அதிகாரிகளிடமும், ஓப்பந்ததாரா்களிடம் கேட்டறிந்தாா்.

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பணிகளை மழையில் செய்யாமல் மழையில்லாத போது தரமாக செய்யவேண்டும், அதே நேரத்தில் செங்கம் செய்யாற்றில் தண்ணீா் வரும் முன் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து தரமாக முடிக்கவேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

உடன் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் இளம்வழுதி, கோட்டப்பொறியாளா்கள் லெனின், சுகந்தி, உதவி கோட்டப்பொறியாளா்கள் மனோகரன், சோமேஸ்வரி, உதவி பொறியாளா்கள் செங்கம் பரித்தி, சரவணன், சாலை ஆய்வாளா் குமாா் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.