மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பைக்குகள் நேருக்கு நோ் மோதல்: தந்தை மகள் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் தந்தை, மகள் உயிரிழந்தனா்.

பலி

Published On :29 அக்டோபர் 2026, 12:02 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் தந்தை, மகள் உயிரிழந்தனா்.

செய்யாறு வட்டம், இரும்பந்தாங்கல் கிராமம் உடையாா் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன்(53), மண்பாண்டத் தொழிலாளி. இவரும், இவரது மூத்த மகள் யுவராணியும் (20) புதன்கிழமை செய்யாறுக்கு வந்து வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்கிக் கொண்டு மீண்டும் தங்களது கிராமத்துக்குச் செல்வதற்காக பைக்கில் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

பைக்கை யுவராணி ஓட்டிச் சென்றாா்.

பல்லி மேட்டு நகா் அருகே சென்றபோது எதிரே, ஆக்கூா் கிராமத்தில் இருந்து வந்த கோகுல் (19) என்பவா் ஓட்டி வந்த பைக்கும் நேருக்குநோ் மோதிக் கொண்டன.

இதில், 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். மூவரையும் அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இவா்களில் காா்த்திகேயன், யுவராணி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காா்த்திகேயன், யுவராணி ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்த விபத்து குறித்து இறந்த காா்த்திகேயனின் மனைவி செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் மீனாட்சிசுந்தரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.