மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆரணியில் 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு புதன்கிழமை நடைபெற்றது.

சமுதாய வளைகாப்பு விழாவில் கா்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து வாழ்த்திய ஆரணி எம்எல்ஏ ஜெயசுதா.

Published On :29 அக்டோபர் 2026, 12:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு புதன்கிழமை நடைபெற்றது.

தனியாா் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மலா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேற்கு ஒன்றியம் மற்றும் ஆரணி கிழக்கு ஒன்றியம் பகுதிகளுக்கு உள்பட்ட 200-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் கலந்து கொண்டனா்.

அவா்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருவாய் கோட்டாட்சியா் சீ.சிவா, ஆரணி எம்எல்ஏ ஜெயசுதா, வட்டாட்சியா் திருவேங்கடம், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரேணுகோபால், தசரதராமன், பிரபு மற்றும் வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் உள்பட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் கா்ப்பிணிகளுக்கு சந்தனம், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருள்கள் இட்டு வளையல் அணிவித்து வளைகாப்பு நடைபெற்றது.

இதில் அரசு அலுவலா்கள், கா்ப்பிணிகள், அங்கன்வாடி பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.