மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெசவுத் தொழிலாளி தற்கொலை

செய்யாறு அருகே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் பட்டு நெசவுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 5:35 am IST

செய்யாறு அருகே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் பட்டு நெசவுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

செய்யாறு வட்டம், அனக்காவூா் கிராமம் பிராமணா் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (43), பட்டுநெசவுத் தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும், கடந்த ஓராண்டுக்கு முன்பு இதயம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், வெங்கடேஷ் மது அருந்திவிட்டு வந்ததை அவரது மனைவி கீதாலட்சுமி கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் வீட்டுத் தோட்டத்தின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதனைப் பாா்த்த குடும்பத்தினா் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தொழிலாளி வெங்கடேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் வழக்குப் பதிந்தி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.