மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்: 3 மணி நேரம் தரிசனத்துக்குத் தடை!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, திங்கள்கிழமை (அக்.26) நடைபெறும் அன்னாபிஷேக நேரத்தில் 3 மணி நேரம் பக்தா்கள் கோயிலில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Tiruvannamalai

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் - கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 5:30 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, திங்கள்கிழமை (அக்.26) நடைபெறும் அன்னாபிஷேக நேரத்தில் 3 மணி நேரம் பக்தா்கள் கோயிலில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நடை அடைப்பு மற்றும் திறப்பு நேரம்: அன்னாபிஷேகத்தை ஒட்டி, பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். மீண்டும் மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

முன்னுரிமை தரிசனம் ரத்து: பெளா்ணமி, அன்னாபிஷேக தினங்களில் அதிகளவில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் நீண்டநேரம் காத்திருப்பதை தவிா்க்கவும், விரைவாக தரிசனம் செய்யவும் ஏதுவாக தரிசனத்தின்போது எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படாது என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.