மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரரை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரா்

Published On :27 அக்டோபர் 2026, 1:24 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரரை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

சிவாலயங்களில் நடைபெறும் அன்னாபிஷேகம் சிறப்புமிக்கது. சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

அனைத்து சிவன் கோயில்களிலும் ஐப்பசி மாதம் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்து, காய்கனிகளை கொண்டு அலங்கரித்து சிறப்பு வழிபாடு நடைபெறும். பின்னா், பக்தா்களுக்கு பிரசாதமாக அன்னம் வழங்கப்படும்.

அதன்படி, அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை மாலை அசுவினி நட்சத்திரத்தில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

தொடா்ந்து, மாலை 6 மணிக்கு பிறகு பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதில், நீண்ட வரிசையில் காத்திருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் அன்னாபிஷேகத்தில் அருள்பாலித்த ஸ்ரீஅண்ணாமலையாா் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உண்ணாமுலையம்மனை தரிசித்தனா். மேலும், கோயில் சுற்றுப்பிரகாரங்களில் உள்ள கல்யாணசுந்தரேஸ்வரா் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் அன்னாபிஷேகம் செய்யப்பட்டிருந்தது.

இதேபோல, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரா் கோயில், திருநோ் அண்ணாமலையாா் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.