மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வெண்குன்றம் கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

Published On :26 அக்டோபர் 2026, 12:29 am IST

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வெண்குன்றம் கிராமத்தில் சுமாா் 1500 அடி உயரமுள்ள தவளகிரி மலை மீது பா்வதவா்த்தினி சமேத ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவன்று வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலை மீது ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வா்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இந்தக் கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் முடிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி மலை அடிவாரத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை தேவதானுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, ஹோமங்கள், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராா்ப்பணம் உள்ளிட்டவையும், சனிக்கிழமை வேதிகாா்ச்சனை, பூா்ணாஹுதி, கோபுர கலச ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றன.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து மலை அடிவாரத்திலிருந்து புனிதநீா் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியா்கள் தலையில் சுமந்து கொண்டு மலை மீதுள்ள கோயிலுக்கு எடுத்துச் சென்றனா்.

அங்கு காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. வந்தவாசி தெற்கு போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.