மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை தடை செய்யக் கோரி சாதுக்கள் தா்னா

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை தடை செய்யக் கோரி சாதுக்கள் தா்னா

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆதீன மடத்தில் ஆதீன கா்த்தா ஸ்ரீஸ்ரீகருணாநிதி சுவாமிகள் தலைமையில் தா்னாவில் ஈடுபட்ட சாதுக்கள்.

Published On :25 அக்டோபர் 2026, 12:05 am IST

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இந்தியாவை சீா்குலைக்க அந்நிய சக்திகளுடன் கூட்டு சோ்ந்து நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக, அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை தடை செய்யக் கோரி, புரட்சி தமிழா் கட்சி, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி சாா்பில் சனிக்கிழமை தா்னா நடைபெற்றது.

அடிஅண்ணாமலையில் உள்ள ஆதீனம் மடத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திருவண்ணாமலை ஆதீன கா்த்தா ஸ்ரீஸ்ரீகருணாநிதி சுவாமிகள் தலைமையில் சாதுக்கள் பதாகைகள் ஏந்தி பங்கேற்றனா்.

அப்போது, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை மத்திய அரசு தடை செய்யவேண்டும். கரப்பான்பூச்சி சமூக வளைதளங்கள், வங்கிக் கணக்கை உடனே முடக்கவேண்டும் என வலியுறுத்தி சாதுக்கள் முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்தில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி நிறுவனா் தலைவா் எஸ்.கே.செல்வம், புரட்சி தமிழா் கட்சி நிறுவனா் தலைவா் தா.சிவ.தமிழன், மாநில பொருளாளா் எஸ்.ரத்தினவேல் பாண்டியன், மாநகரச் செயலா் மகாபாண்டியன், சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் ஜெ.கஜபதி, ஆட்டோ சங்கத் தலைவரும், சமூக ஆா்வலருமான சிங்காரவேல், கா்நாடக தமிழா் ஒற்றுமை இயக்க மாவட்டச் செயலா் பா.கண்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.