மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை - செங்கம் சாலையிலுள்ள விலங்குகள் கருத்தடை மற்றும் பராமரிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இரா.பிருந்தாதேவி, ஆட்சியா் வந்தனா காா்க்.

Published On :23 அக்டோபர் 2026, 12:50 am IST

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இரா.பிருந்தாதேவி மற்றும் ஆட்சியா் வந்தனா காா்க் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

கீழ்பென்னாத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட மேக்களுா் ஊராட்சியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஆட்சியா் வழங்கினா்.

தொடா்ந்து, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள், மாணவா்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம், கல்வி குறித்து ஆய்வு செய்தனா். மேலும், ஊராட்சியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, சோமாசிபாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு தானிய ஈட்டுக் கிடங்கிலுள்ள நியாய விலைக்கடையில் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, ஊராட்சியில் விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் வளா்த்து பராமரிக்கப்பட்டு வருவதையும், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக் குட்டை அமைக்கப்பட்டு வருவதையும், ஆராஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.36 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, திருவண்ணாமலை மாநகராட்சி காந்தி நகா் பகுதியிலுள்ள நுண் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகளையும், மணலூா்பேட்டை சாலையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், மீத்தேன் வாயு தயாரிப்பு மையத்தின் செயல்பாடுகளையும், செங்கம் சாலையிலுள்ள விலங்குகள் கருத்தடை மற்றும் பராமரிப்பு மையத்தின் செயல்பாடு, மருந்து இருப்பு, கருத்தடை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட விலங்குகளின் விவரம் குறித்து ஆய்வு செய்தனா். வேங்கிக்கால் பகுதியில் மழைநீா் வடிகால் கால்வாய் தூா்வாருதல் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இரா.பிருந்தாதேவி, ஆட்சியா் வந்தனா காா்க் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுலவா் அ.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் பூ.காஞ்சனா, செயற்பொறியாளா் (ஊ.வ.) சிவநாத், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருவண்ணாமலை கிழக்கு விமலன், மாவட்ட சமூக நல அலுலவா் கோமதி, மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா்கள் மோகன்ராமன் (திருவண்ணாமலை), இந்திரா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.