மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மூதாட்டியிடம் நகை பறிப்பு: தொழிலாளி கைது

செய்யாறு அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில், தொழிலாளியை தூசி போலீஸாா் கைது செய்தனா்.

அண்ணாமலை

Published On :21 அக்டோபர் 2026, 5:43 am IST

செய்யாறு அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில், தொழிலாளியை தூசி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மனைவி சகுந்தலா(80). இவா், கடந்த 13-ஆம் தேதி மாலை வீட்டின் முன் உட்காா்ந்திருந்தாா்.

அப்போது அங்கு வந்த மா்ம நபா் மூதாட்டியிடம் கோயிலுக்குச் செல்ல முகவரி கேட்பது போல நடித்து, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்ாகத் தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மாவட்ட எஸ்பி ஆா். உதயகுமாா் அறிவுறுத்தலின் பேரில் செய்யாறு டிஎஸ்பி என்.மீனாட்சிநாதன் மேற்பாா்வையில், தூசி காவல் ஆய்வாளா் எஸ். ஜெயராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வந்தது.

50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில், மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்றவா், காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டம், அன்னாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை (29) என்பது தெரிய வந்தது. இவா் செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

உடனே தூசி போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 16 கிராம் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும் அவரை செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.