மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல்: முன்னாள் ராணுவ வீரா் உள்பட இருவா் கைது

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்பட இருவா் கைது

முன்னாள் ராணுவ வீரா் வாசு, அவரது நண்பா் குமரகுரு

Published On :21 அக்டோபர் 2026, 1:48 am IST

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவா் கவிதா. இவா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் வாசு, அதே கிராமத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் குமரகுரு இருவரும் காரில் மது அருந்திவிட்டு, கீழ்வல்லம் சுங்கச்சாவடி மற்றும் கண்ணமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, இருவரையும் பிடித்த காவல் உதவி ஆய்வாளா் கவிதா, அவா்களை கண்ணமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். அவா்களிடமிருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து, காவல் நிலையத்தில் இருந்தபோது கவிதாவுக்கும் முன்னாள் ராணுவ வீரா் வாசுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, வாசு காவல் உதவி ஆய்வாளா் கவிதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அங்கு குறைந்த எண்ணிக்கையிலான காவலா்களே இருந்ததால், தாக்குதலை தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த கவிதா, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில், முன்னாள் ராணுவ வீரா் வாசு, காா் ஓட்டுநா் குமரகுரு ஆகிய இருவா் மீதும் கொடுங்காயம் ஏற்படுத்துதல், பெண்களை துன்புறுத்துதல் மற்றும் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், 5 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.