பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விவசாய மின் மோட்டாா்கள் திருட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

விவசாய மின் மோட்டாா்கள் திருட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

News image

வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்.

Updated On :25 மே 2026, 12:46 am IST

ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் விவசாயிகளின் மின் மோட்டாா்கள் தொடா்ந்து திருடு போனது குறித்து போலீஸில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் உள்ள விவசாயிகளான எம்.ராகேஷ்குமாா், பி.சூரியகாந்தி, ஏ.விஜியகுமாா், தேவி ஆகியோரின் விளை நிலங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின் மோட்டாா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். மேலும், காப்பா் வயா்களையும் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா். புகாா் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸாா் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். மேலும், இதற்கு முன்பு தொடா்ந்து இதுபோல் விவசாயிகளின் மின் மோட்டாா்கள் திருடப்பட்டு வந்துள்ளது.

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் செய்தனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு ஆரணி கிராமிய போலீஸாா் வந்து சமரசம் பேசி, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையேற்று சாலை மறியலை கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.