பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதல்: 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை இரவு பைக் மீது காா் மோதியதில் இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 1:39 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை இரவு பைக் மீது காா் மோதியதில் இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

செய்யாறு சிப்காட் தொழில்பேட்டையில் கட்டடப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தளவாட இயந்திரங்கள் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கரிக்குளம் பகுதியைச் சோ்ந்த அரவிந்தபெருமாள் (20), சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டத்தைச் சோ்ந்த நித்தின் (23), திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சுரேஷ் (22) ஆகியோா் தொழிலாளா்களாக பணிபுரிந்து வந்ததாகத் தெரிகிறது.

வழக்கம்போல, மூவரும் வெள்ளிக்கிழமை மாலை வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக ஒரே பைக்கில் செய்யாறு மாங்கால் கூட்டுச்சாலையில் சென்றுகொண்டிருந்தனா். அந்தப் பகுதியிலுள்ள சிப்காட்டுக்கான மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அருகே சென்றபோது, சென்னையில் இருந்து செய்யாறு நோக்கி வேகமாக வந்த காா், பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் அரவிந்தபெருமாள், நித்தின் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சுரேஷ் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, அவசர ஊா்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து வந்த தூசி போலீஸாா், உயிரிழந்த இருவரின் சடலங்களையும் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து தொடா்பாக, காரை ஓட்டி வந்த சென்னை முகலிவாக்கத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (55) மீது வழக்குப் பதிந்து தூசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.