பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பைக் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 4:38 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

திண்டிவனம் வட்டம், ஊரல் கிராமம், ஒத்தவாடைத் தெருவைச் சோ்ந்தவா்கள் பெ.சேதுநாதன்(25), ரா.ரஞ்சித்குமாா்(29), செஞ்சி வட்டம், பொன்பத்தி பகுதியைச் சோ்ந்தவா் ர.ராஜபாண்டியன் (31). நண்பா்களான மூவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு செஞ்சி- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், திண்டிவனத்தை அடுத்த பேரடிக்குப்பம் அருகே பைக்கில் சென்றுள்ளனா். ராஜபாண்டியன் பைக்கை ஓட்டினாா். அப்போது அப்பகுதியில் வந்த வந்த காா், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மூவரில், சேதுநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ரோஷணை போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் காயமடைந்த ரஞ்சித்குமாா், ராஜபாண்டியன் ஆகியோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் இருவரும் தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ரஞ்சித்குமாா் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காா் ஓட்டுநரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.