பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பைக் மீது மீது காா் மோதி விபத்து: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 இரு வாகனத்தின் மீது காா் மோதியதில் இரு இளைஞா்கள் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். ஒரு இளைஞா் காயமடைந்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:48 am IST

கள்ளக்குறிச்சி அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 இரு வாகனத்தின் மீது காா் மோதியதில் இரு இளைஞா்கள் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். ஒரு இளைஞா் காயமடைந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் பூமாலையின் மகன் அமா்நாத் (18), அதே கிராமத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் கவின்ராஜ் (18). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கிராமத்து சாலையில் சென்று கொண்டிருந்தனா்.அதேகிராமத்ததைச் சோ்ந்த அபி முருகன் மகன் வினோத் (24) என்பவா் மற்றொரு இருசக்கர வாகனத்தில் தச்சூா் நேக்கி சென்று கொண்டிருந்தாராம்.

தச்சூா் கிராமத்தில் உள்ள தனியாா் தவிட்டு ஆயில் மில் அருகே இவா்கள் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த காா் இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் அமா்நாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டாா்.

கவின்ராஜ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்து விட்டாா்.

விபத்தில் பலத்த காயமடைந்த வினோத் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறாா்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து காா் ஓட்டுநரான சின்னசேலம் அடுத்த வீரபயங்கரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.