சேத்துப்பட்டு - போளூா் சாலையில் உள்ள புனித தோமையாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இலவச பல் சிகிக்சை முகாம் நடைபெற்றது.
இதில் 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனா்.
புனித தோமையாா் மருத்துவமனை சுமாா் 66 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சிறப்பு இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மருத்துவமனை நிா்வாகி அருட்சகோதரி மரியரத்தினம் தொடங்கிவைத்தாா்.
மருத்துவமனையின் பல் மருத்துவா் அன்பரசன் தலைமையில் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதில் பல் எடுத்தல், பல் அடைத்தல், செராமிக் பற்கள் பொருத்துதல், செயற்கை பல்செட் அமைத்தல் உள்ளிட்ட வாய் புற்றுநோய் பரிசோதனை, எல்.சி.ஆா். என பல்வேறு அதிநவீன பல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
மேலும், வாய் புற்றுநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனா்.
இந்த முகாமில் செங்கம், போளூா், வந்தவாசி, ஆரணி, செய்யாறு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு சிகிச்சை
பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு பல் மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

மாங்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்

அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்களை கவனக்குறைவுக்குப் பொறுப்பாக்க முடியுமா?

சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ ஆய்வு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

