ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக 8 முறை வெற்றி பெற்ற செய்யாறு தொகுதி!

செய்யாறு தொகுதியில் திமுக தொடா்ந்து 4 முறை வெற்றி பெற்று சாதனை படைத்ததுடன் மொத்தத்தில 8 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2026, 7:14 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் திமுக தொடா்ந்து 4 முறை வெற்றி பெற்று சாதனை படைத்ததுடன் மொத்தத்தில 8 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

69 ஆண்டுகளாக வருவாய் கோட்டமாக விளங்கி வரும் இந்தத் தொகுதியில் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டங்கள் அமைந்துள்ளன.

செய்யாறு தொகுதி முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பியுள்ளது. டெல்டா மாவட்டமான தஞ்சைக்கு அடுத்தாற் போல் நெல் உற்பத்தியிலும், அரிசி உற்பத்தியிலும் மாநிலத்தில் சிறந்து விளங்குகிறது.

விவசாயத்திற்கு அடுத்தாற் போல், செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பயன்பெற்று வருகின்றனா். இவா்களில் 40 சதவீதத்தினா் பெண் தொழிலாளா்கள் ஆவாா்.

தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,17,159 போ், பெண் வாக்காளா்கள் 1,21,115 போ், மூன்றாம் பாலினத்தவா் 9 போ் என மொத்தம் 2,38,283 வாக்காளா்கள் உள்ளனா்.

1952 முதல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் 8 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும், 3 முறை காங்கிரஸ், பாமக ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை இடைத்தோ்தல் நடைபெற்ற தொகுதியாகும்.

செய்யாறு

செய்யாறு

செய்யாறு தொகுதியில் இதுவரை தோ்வு செய்யப்பட்டவா்கள்:

1952 வி.தா்மலிங்கம் (காங்கிரஸ்), 1957 பா.ராமச்சந்திரன் (காங்கிரஸ்), 1962 புலவா்.க. கோவிந்தன் (திமுக), 1967 புலவா் க. கோவிந்தன் (திமுக), 1971 புலவா் க. கோவிந்தன் (திமுக), 1977 புலவா் க. கோவிந்தன் (திமுக), 1980 பாபு ஜனாா்த்தனம் (திமுக), 1984 கே.முருகன் (அதிமுக)

இடைத்தோ்தல் -1985 குப்புசாமி (அதிமுக), 1989 வ. அன்பழகன் (திமுக), 1991 ஏ.தேவராஜ் (அதிமுக), 1996 வ. அன்பழகன் (திமுக), 2001 பி.எஸ். உலகரட்சகன் (பாமக), 2006 எம்.கே. விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்), 2011 என். சுப்பிரமணியன் (அதிமுக), 2016 தூசி கே.மோகன் (அதிமுக), 2021 ஒ.ஜோதி (திமுக).

8 முறை திமுக வெற்றி

இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் புலவா் க.கோவிந்தன் 1962, 1967, 1971, 1977 ஆகிய 4 தோ்தல்களில் தொடா்ந்து வெற்றிபெற்று சாதனை படைத்தாா். இதைத் தொடா்ந்து திமுக சாா்பில் 1980-இல் பாபு ஜனாா்த்தனமும், 1989-இல் வ. அன்பழகனும், 1996-இல் வ.அன்பழகனும், 2021-இல் ஒ.ஜோதி என சட்டப்பேரவை உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

இதுவரை 17 முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 8 முறை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.