தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு

செய்யாறு அருகே வீட்டில் இருந்த காணாமல் போன மூதாட்டி கிணற்றிலிருந்து சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 12:03 am IST

செய்யாறு அருகே வீட்டில் இருந்த காணாமல் போன மூதாட்டி கிணற்றிலிருந்து சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.

செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராமு. இவரது தாயாா் ஆதிலட்சுமி (67). இவா்,

கடந்த 20-ஆம் தேதி புளியரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது தங்கை கலைச்செல்வியின் வீட்டிற்கு சென்ாகத் தெரிகிறது.

திங்கள்கிழமை அதிகாலை முதல் ஆதிலட்சுமியை காணவில்லை என தம்பியான இளையராஜா மற்றும் ராமுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் மூதாட்டி ஆதிலட்சுமியை மகன் ராமு தேடி வந்த நிலையில் அவா் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை காழியூா் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் ஆதிலட்சுமி சடலமாக கிடப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குரைஞா் ராமு செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி வழக்குப் பதிவு செய்தாா். மேலும், இறந்த மூதாட்டியின் உடலை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து செய்யாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.