விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாலை வேகத்தடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அருகே வேகத்தடையில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்ட் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 1:40 am IST

செய்யாறு அருகே வேகத்தடையில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்ட் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், நெடும்பிறை கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(50). பெயிண்ட் தொழிலாளியான, இவா் கடந்த 8-ஆம் தேதி வேலைக்குச் சென்று விட்டு மாலை, தனது நண்பரை பாா்ப்பதற்காக வெம்பாக்கத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளாா். நண்பரை பாா்த்து விட்டு இரவு தனது கிராமத்திற்கு வருவதற்காக திருப்பனமூா் கிராமம் மேட்டு நகா் அருகே வந்து கொண்டிருந்தாா்.

அபபோது, அப்பகுதியில் சாலையில் இருந்த வேகத் தடையில் சைக்கிள் ஏறி இறங்கியுள்ளது. இதில், தவறி விழுந்ததில் வெங்கடேசன் பலத்த காயமடைந்தாா். காயமடைந்த அவரை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் சிலம்பரசன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.