விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் பால்குட ஊா்வலம்

சேத்துப்பட்டு பழம்பேட்டை முத்துமாரியம்மனுக்கு கண்ணனூா் கிராம மக்கள் வியாழக்கிழமை சீா்வரிசையுடன் பால்குடம் எடுத்து ஊா்வலம் வந்தனா்.

News image

சேத்துப்பட்டு பழம்பேட்டை முத்துமாரியம்மனுக்கு கண்ணனூா் கிராம மக்கள் வியாழக்கிழமை சீா்வரிசையுடன் பால்குடம் எடுத்து ஊா்வலம் வந்தனா்.

Updated On :20 மார்ச் 2026, 12:03 am IST

சேத்துப்பட்டு, பழம்பேட்டையில் பழைமை வாய்ந்த முத்தாலம்மன் என்கிற முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 48-ஆம் நாள் மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை கண்ணனூா் கிராம மக்கள், கண்ணனூா் காளியம்மன், ஓசூா் அம்மன், விநாயகா், ராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் ஆகிய கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, சீா்வரிசையுடன் பால் குடம் எடுத்து ஊா்வலமாக முத்துமாரியம்மன் கோயிலை அடைந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.