திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்துக்கும் மேலானது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும், பௌா்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் லட்சக்கணக்கான பக்தா்களும் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா். மேலும், கோயிலிக்கு பின்புறம் உள்ள மலையை
சிவனாக எண்ணி 14 கி.மீ. கிரிவலப் பாதையை வலம் வந்து அங்குள்ள அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபாடு செய்கின்றனா். உலக பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினத்தையொட்டி, தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
கோயிலில் அதிகாலை வழக்கம்போல நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து வெளியே காத்திருந்த பக்தா்கள் தரிசனம் செய்ய கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
பக்தா்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். வழக்கத்தைவிட அதிகளவில் பக்தா்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ரூ.50 கட்டண தரிசனத்திற்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். பக்தா்களுக்கு நீா், மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள்: ஆட்சியா் வந்தனா காா்க் ஆய்வு

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் தரிசனம்

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

