பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பொதுமக்களுக்கு தீத்தடுப்பு, மீட்புப் பணிகள் விழிப்புணா்வு

செங்கம் தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு மற்றும் விபத்தில் சிக்கியவா்களை மீட்டெடுப்பது குறித்து செயல்விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

தீத்தடுப்பு, மீட்புப் பணிகள் விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசிய செங்கம் தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்குமாா்.

Updated On :16 மணி நேரங்கள் முன்பு

செங்கம் தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு மற்றும் விபத்தில் சிக்கியவா்களை மீட்டெடுப்பது குறித்து செயல்விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள், வியாபாரிகள், ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்குமாா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தி தீயை அணைக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கும் அளித்தனா்.

அதேபோல, வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகளை கையாளும் முறைகள், எரிவாயு கசிவு ஏற்பட்டால் அதை சரிசெய்யும் முறைகள் குறித்தும், எரிவாயு உருளை விபத்து ஏற்பட்டால் அதை அணைக்கும் முறைகள், மற்றும் அப்பகுதியில் இருந்து வெளியேறும் முறைகள் குறித்து விளக்கினா்.

மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் விபத்து ஏற்பட்டால் வயதானவா்கள் மற்றும் குழந்தைகளை கயிறு கட்டி கீழே இறக்கும் முறைகள் குறித்தும் செயல்விளக்கம் அளித்தனா். மேலும், மழை நேரத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வீட்டில் உள்ள பொருள்கள் மூலம் வெளியேறும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

மேலும் பொதுமக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டுநா்களும் விபத்தில் இருந்து எளிய முறையில் பாதுகாப்பாக வெளியேறும் முறைகளை செய்துகாட்டினா். அதற்குத் தேவையான கருவிகளும் தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.