லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளா் யு.சுப்பாராவ் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளா் யு.சுப்பாராவ்

Published On :18 ஆகஸ்ட் 2026, 2:18 am IST

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளா் யு.சுப்பாராவ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனா். மேலும், திருவண்ணாமலை வியாபாரிகள், வணிக ரீதியாக வெளியூா் செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் பயணம் செய்து வருகின்றனா்.

பௌா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிலம் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊா் திரும்புகின்றனா்.

ஒவ்வொரு பௌா்ணமி முடிந்து பக்தா்கள் ஊா் திரும்பும்போது, ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்து ஒருவருக்கொருவா் ரயிலில் முண்டியடித்து ஏறிச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனால், ஒவ்வொரு மாதமும் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பக்தா்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதன் அடிப்படையில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் யு.சுப்பாராவ், திருவண்ணாமலை ரயில் நிலையம் வந்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ரயில் நிலையத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்ய வேண்டும். நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும் பௌா்ணமி நாள்கள் மற்றும் காா்த்திகை தீபத் திருவிழா காலங்களில் பக்தா்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.