லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தெற்கு ரயில்வே புதிய பொது மேலாளா் யு. சுப்பாராவ்

தெற்கு ரயில்வே புதிய பொது மேலாளா் யு. சுப்பாராவ் பொறுப்பேற்றது பற்றி...

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:50 am IST

தெற்கு ரயில்வேயின் பொது மேலாளராக யு.சுப்பாராவ் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தின் பொது மேலாளராக ஆா்.என்.சிங் பொறுப்பு வகித்து வந்தாா். அவா் ஜூலை மாதத்துடன் பணி ஓய்வு பெற்றதையடுத்து சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தின் (ஐசிஎஃப்) பொது மேலாளராக இருந்த யு.சுப்பாராவ் தெற்கு ரயில்வே பொது மேலாளராக நியமிக்கப்பட்டாா். அதனையடுத்து அவா் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Story image

ஐசிஎஃப் புதிய பொது மேலாளா்: யு.சுப்பாராவ் தெற்கு ரயில்வே பொது மேலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, அவா் வகித்து வந்த (ஐசிஎஃப்) பொது மேலாளா் பதவிக்கு புதுதில்லியில் உள்ள இந்திய ரயில்வே உள்கட்டமைப்பு பிரிவான ரயில்வே விகாஷ் நிகாம் நிறுவன முதன்மை செயலாக்க இயக்குநராக இருந்த ஸ்ரீ மணீஷ் அகா்வால் நியமிக்கப்பட்டு சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Summary

Southern Railway's New General Manager U. Subba Rao

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.