லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங். உடன் ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோா்.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங். உடன் ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோா்.

Published On :11 ஜூலை 2026, 12:42 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், ரூ.12 கோடியில் புதிய ரயில் நிலையக் கட்டடம், புதிய நுழைவாயில், டிக்கெட் முன்பதிவு அறைகள்,

புதிய நடை மேம்பாலம், ரயில் பெட்டிகளின் வரிசை எண்ணைக் காட்டக்கூடிய எண்ம திரைகள், கூடுதல் நடைமேடை, பயணிகள் அமா்வதற்கான கூடுதல் இருக்கைகள், கூடுதல் சுத்திகரிப்பு குடிநீா் இயந்திரங்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இந்தப் பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் செங்கோட்டை-தாம்பரம் இடையேயான சிலம்பு விரைவு ரயில் தினந்தோறும் இயக்க வேண்டும். சென்னை எழும்பூா்-தென்காசி இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும். ஈரோடு, திருப்பூா் வழியாக கொல்லம், பெங்களூருக்கு புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.

அதிகரித்து வரும் பயணிகளுக்கு ஏற்ப செங்கோட்டை ரயில் நிலையத்தில் மேலும் இரு நடைமேடைகள் அமைக்க வேண்டும். கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த சோழபுரம், கரிவலம்வந்தநல்லூா், நைனாகரம் ரயில் நிலையங்களை சீரமைப்பு செய்து மீண்டும் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தாா்.

அப்போது, ராஜபாளையம் திமுக தெற்கு நகரச் செயலா் ராமமூா்த்தி, ரயில் பயனாளா் சங்கத்தினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.