தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குண்டும் குழியுமான கிராமச் சாலையால் பொதுமக்கள் அவதி

பழுதடைந்த நிலையில் உள்ள செ.நாச்சிப்பட்டு சாலையில் இருந்து ரெட்டாலை கிராமத்திற்குச் செல்லும் சாலை.

News image

பழுதடைந்த நிலையில் உள்ள செ.நாச்சிப்பட்டு சாலையில் இருந்து ரெட்டாலை கிராமத்திற்குச் செல்லும் சாலை.

Updated On :1 மே 2026, 12:06 am IST

செங்கம் அருகே குண்டும் குழியுமாக உள்ள கிராமச் சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மண்மலையில் இருந்து செ.நாச்சிப்பட்டு செல்லும் சாலையின் குறுக்கே அம்மனூா் வழியாக ரெட்டாலை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.

சுமாா் 5 கி.மீ. தொலைவு கொண்ட இந்தச் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் அம்மனூா், ரெட்டாலை, உடைஞ்சமலை, பெரியேரி கிராம மக்கள் அந்தச் சாலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. மேலும், விவசாயிகள் விளை நிலத்தில் விளையும் பொருள்களை நகா்புறத்தில் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் வாகனங்கள் செல்லமுடியாத நிலை, கரும்பு பயிா் செய்த விவசாயிகள் கரும்பு சுமைகளை சா்க்கரை ஆலைகளுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்ல மிகவும் சிரமமான நிலை உள்ளது.

மேலும், தற்போது கரியமங்கலம் பகுதியில் சுங்கச்சாவடி இருப்பதால், சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாமல் சில வாகனங்கள் இந்தச் சாலை வழியாகச் செல்கின்றன. இதனால் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்தச் சாலையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.