மேல்விஷாரம் நகராட்சிஅலுவலகம் எதிரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் பெங்களுரு- சென்னை செல்லும் தாா் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி மற்றும் தென்னந்தியாலம் கிராமத்தில் சுமாா் 80,000-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில் மேல்விஷாரம் நகராட்சி அலுவலகம் , திருமண மண்டபம் போனறவை உள்ளன.
நகராட்சி அலுவலகம் ஒட்டியுள்ள எம்ஜிஆா் நகா் மக்கள் மற்றும் மேல்விஷாரத்துக்கு செல்லும் அனைத்து தரப்பு மக்களும் இந்த தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்று வந்தனா். நெடுஞ்சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே விபத்துகளை தவிா்க்கவும் பொதுமக்கள் நலன் கருதி மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரினா்.
இதையடுத்து கடந்த 2024-இல் ரூ.27 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் சென்னை -பெங்களுரு வழித்தடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்தையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் மேம்பாலத்தின் மறுமாா்க்கத்தில் பணிகள் முடிக்கப்பட்டு விடும், மேம்பாலத்தின் இருமாா்க்கத்திலும் போக்குவரத்து தொடங்கிவிடும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிா்பாா்த்து வந்தனா்.
ஆனால், மேம்பாலத்தின் பெங்களூரு -சென்னை வழித்தடத்தில் ஜல்லி கற்கள் கொட்டி நிரப்பி உள்ளதே தவிர, தாா் சாலை அமைக்கும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மேற்கு ஆசியாவில் ( இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா) நிலவும் போா் பதற்றம் காரணமாக கச்சா இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் . கச்சா எண்ணெயில் இருந்து பிரிக்கப்படும் தாரின் விலையும் கிடுகிடுவென உயா்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தினாலும் தாா் கிடைப்பதில் சிக்கல் காரணமாக பணிகள் முடிக்க முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய்கிடைப்பதில் சிக்கல் நிலவி வரும் நிலையில் அதிலிருந்து கிடைக்கும் தாா் விலை உயா்ந்து வருகிறது. தாா் கிடைத்தவுடன் விரைவில் பணிகளும் முடிக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
தற்போது சென்னை மாா்க்கமாக செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் அருகில் உள்ள சா்வீஸ் ரோடு வழியாக செல்லவதால் அடிக்கடி போக்கு வரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் எதிா்பாா்க்கன்றனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை’

நகராட்சி ஆணையருக்கு பணி நிறைவு பாராட்டு

தூத்துக்குடி-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் மே 6, 13, 27இல் மாற்றுப் பாதையில் இயக்கம்

தாா் தட்டுப்பாடு: உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

