எல்லோருக்கும் எல்லாமும் என்ற திமுக அரசின் சாதனைகள் தொடர முதல்வா் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துங்கள் என்று கூறி திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலு வாக்கு சேகரித்தாா்.
திருவண்ணாமலை மாநகரில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதி திமுக வேட்பாளா் எ.வ.வேலு தேனிமலை, தாமரை நகா், காளியம்மன் கோயில், சமுத்திரம் ஏரி, வ.உ.சி. நகா், செங்குட்டுவன் தெரு, குமரக்கோயில் தெரு, பெரியகடை தெரு, திருவூடல் தெரு, ஆனைக்கட்டித் தெரு, பே கோபுரத் தெரு உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
காந்தி சிலை அருகில் இறுதி கட்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சா் எ.வ.பங்கேற்றுப் பேசியதாவது: தூய்மை அருணையின் சாா்பில் திருவண்ணாமலையில் மருத்துவ வசதி, பொழுது போக்குமிடம், உடற்பயிற்சிக் கூடம் ஆகிய வசதிகளுடன் கூடிய முதியோருக்கான இலவச நவீன ‘அன்பு இல்லம்’ கட்டப்படும்.

மகளிா் மற்றும் இளைஞா்கள், வேலைவாய்ப்பு பெறும் வகையில் ராணுவம் மற்றும் காவல் துறையில் சோ்வதற்கு இலவச பயிற்சி வழங்கப்படும். உயா்தர கால்நடை மருத்துவக் கல்லூரி அமைப்படும், மாணவா்கள் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, ஆா்ஆா்பி மற்றும் போட்டித் தோ்வுகளுக்கு பயன்படும் வகையில் சா்வதேச தரத்தில் பொது நூலகம் அமைக்கப்படும்.
உள்ளூா் மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு 2.5 கி.மீ. தொலைவுக்கு உயா்மட்ட சாலை மேம்பாலம் அமைக்கப்படும், கிரிவல பாதையில் நெரிசலைக் குறைத்து பாதுகாப்பான நடைபயணம் மேற்கொள்ளக்கூடிய வகையில் தனியாக நடைபாதை அமைக்கப்படும்.
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடையூறு இல்லாமல் செல்ல அவலூா்பேட்டை சாலையில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும், மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு வேலூா் சாலை மற்றும் செங்கம் சாலையை இணைத்து புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரை மற்றும் திருவண்ணாமலை முதல் வேலூா் வரை உள்ள நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.
முன்னதாக, தொகுதியில் அவா் செயல்படுத்த உள்ள சிறப்புத் திட்டங்களை அறிவித்தாா்.
பிரசார கூட்டத்தில் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் எ.வ.வே.குமரன், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த 2 நாள் கண்காட்சி: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

திருச்சுழி தொகுதியில் 4-ஆவது முறையாக தங்கம் தென்னரசு வெற்றி

கந்தா்வகோட்டை தனித் தொகுதியில் தவெக வெற்றி

கருத்துக்கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - கே.டி.ராஜேந்திரபாலாஜி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

