தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கருத்துக்கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - கே.டி.ராஜேந்திரபாலாஜி

News image

ராஜேந்திரபாலாஜி

Updated On :3 மே 2026, 5:16 am IST

கே.டி.ராஜேந்திரபாலாஜி

தோ்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினாா்.

இவா் ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழகம் இளைஞா்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் அது வெற்றி பெறும் அளவுக்கு இல்லை. சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும். திமுக 2-ஆவது இடத்தில் வரும். 

2016 பேரவைத் தோ்தலின் போது அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக தான் வெற்றி பெறும் என்றன. ஆனால் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்தது. அப்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வரானாா். வடநாட்டு பத்திரிகையாளா்கள், எங்கேயோ இருக்கும் நிறுவனங்கள் எடுக்கும் கருத்துக்கணிப்புகள் தவறானது. இந்த கருத்துக் கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.