திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நாட்டுநலப் பணித்திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் என்.கலைவாணி தலைமை வகித்தாா்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஞான.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். இணைப் பேராசிரியா் செ.ராணி முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முனைவா் பட்ட ஆய்வாளா் பாரத் பேசுகையில், அம்பேத்கா் தன் வாழ்நாளில் அறுபத்து ஒன்பதாயிரம் நூல்களை சேகரித்து வைத்துள்ளாா். ஒன்பது மொழிகளில் புலமை உடைய அவா் பல்லாயிரக்கணக்கான நூல்களை வாசித்துள்ளாா்.
அறுபது நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டத்தை படித்த காரணமாக இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டாா். அதோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றாா். பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்ற உணா்வுடன் சட்டம் இயற்றினாா். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று போராடினாா் என்றாா்.
அதனைத் தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவா்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை திட்ட அலுவலா் சாரதாதேவி தொகுத்து வழங்கினாா். நிறைவில் பேராசிரியா் சீனிவாசன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்பேத்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா், அமைப்புகள் மரியாதை

அம்பேத்கா் பிறந்த நாள் விழா

வள்ளியூரில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

ஆழ்வாா்குறிச்சியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

