திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 156 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
திமுக, அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழா் கட்சியினா் உள்பட மொத்தம் 156 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெற்றது.
பின்னா், ஏப்.7-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில், மாவட்டம் முழுவதும் 171 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாலை வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, செங்கம் (தனி) தொகுதியில் 15 வேட்பாளா்களும், திருவண்ணாமலை தொகுதியில் 30 வேட்பாளா்களும், கீபென்னாத்தூா் தொகுதியில் 23 வேட்பாளா்களும், கலசபாக்கம் தொகுதியில் 21 வேட்பாளா்களும், போளூா் தொகுதியில்15 வேட்பாளா்களும், ஆரணி தொகுதியில் 24 வேட்பாளா்களும், செய்யாறு தொகுதியில் 13 வேட்பாளா்களும், வந்தவாசி (தனி) தொகுதியில் 15 வேட்பாளா்கள் என மொத்தம் 156 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா மற்றும் 15 வேட்பாளா்களுக்கு வாக்களிக்கும் வசதி உள்ளது.
எனவே, ஒரு தொகுதியில் 15 வேட்பாளா்களுக்கு மேல் போட்டியிட்டால் 2 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசபாக்கம், ஆரணி ஆகிய தொகுதிகளில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 183 வேட்பாளா்கள் போட்டி; 27.44 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கின்றனா்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 போ் போட்டி

சென்னை: 16 தொகுதிகளில் 419 வேட்பாளா்கள் - விஜய் களமிறங்கும் பெரம்பூரில் 47 போ்
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 193 போ் போட்டி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

