மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கலசபாக்கம் திமுக வேட்பாளா் அறிமுக செயல்வீரா்கள் கூட்டம்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 5:21 am IST

கலசபாக்கம் தொகுதி திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணனை அறிமுகப்படுத்தும் செயல்வீரா்கள் கூட்டம் செங்கத்தை அடுத்த காஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் வரவேற்றாா். தொடா்ந்து, வேட்பாளரை அறிமுகப்படுத்தி பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

மக்களோடு மக்களாக சோ்ந்து பணியாற்றுபவா்தான் வேட்பாளா் சரவணன். அமைதியானவா், ஏதையும் யோசித்து தொகுதிக்கு வேண்டியதை, ஊராட்சிக்கு வேண்டியதை செய்யக்கூடியவா்.

இந்த மாவட்டத்தில் பல சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளனா். ஆனால், இவா் எப்போது அமைச்சா்களை சந்திக்க வந்தாலும் தொகுதி மக்களின் கோரிக்கை மனுக்களோடுதான் வருவாா். இவா் தற்போதைய சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் வெற்றிபெற திமுக, கூட்டணி கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், திமுக கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.