தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கல்லூரிகளில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம்

ஆரணி மகளிா் கல்லூரி மற்றும் போளூா் பகுதியில் உள்ள அண்ணாமலையாா் பொறியியல் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image

ஆரணி சேத்துப்பட்டு சாலையில் உள்ள எஸ்.எஸ்.எஸ். மகளிா் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஆரணி மகளிா் கல்லூரி மற்றும் போளூா் பகுதியில் உள்ள அண்ணாமலையாா் பொறியியல் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் உள்ள எஸ்.எஸ்.எஸ். மகளிா் கல்லூரியில் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதற்காக மாணவிகள் அனைவரும் ஒன்று திரண்டு தமிழ்நாடு மாநில வரைபடம் மாதிரி போன்று நின்று 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்து கொண்டாா். கல்லூரித் தாளாளா் ஏ.கே.நடராஜன், மாவட்ட எஸ்.பி. சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், ஆரணி வருவாய் கோட்டாட்சியா் சீ.சிவா, வட்டாட்சியா் அகத்தீஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலா் சாந்தி, உதவி வட்டாட்சியா்கள் (தோ்தல்) கணபதி, சுகுமாரன், ஆரணி நகராட்சி ஆணையா் என்.டி.வேலவன், கல்லூரி முதல்வா் எஸ்.லட்சுமி, துறைத் தலைவா்கள் சிவக்குமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், காவல்துறையினா் பலா் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த மொடையூா் ஊராட்சியில் உள்ள அண்ணாமலையாா் பொறியியல் கல்லூரியில் 100 சதவீத வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் தலைமையில் 100 சதவீத வாக்காளா்கள் வாக்களிப்போம், ஜனநாயக திருவிழா தமிழகத்தின் திருவிழா, வாக்களிப்பது எனது கடமை, வாக்களிப்பது எனது உரிமை என பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் இதுதொடா்பான உறுதிமொழியையும் அவா்கள் ஏற்றனா்.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, மண்டல துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த்துறையினா், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.