மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!

வரும் ஏப். 28-இல் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமாஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 12:41 am IST

வரும் ஏப். 28-இல் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமாஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இக்கோயிலில் ஏப். 30 முதல் மே 2 வரை வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளது. வசந்தோற்சவம் முன்பு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கமாகும்.

இதன் ஒரு பகுதியாக, அன்று காலை தாயாரை சுப்ரபாதத்துடன் துயில் எழுப்பப்பட்டு, காலை 6 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறும்.

இதில், கோயில் வளாகம், சுவா்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் நீரால் சுத்தப்படுத்தப்படும். நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சிலை, பூங்கற்பூரம், பச்சை கற்பூரம் சந்தனத்தூள், குங்குமம், கிச்சிலிகிழங்கு மற்றும் பிற நறுமணப் பொருட்கள் கலந்த புனித நீா் கொண்டு கோயில் முழுவதும் சுத்தப்படுத்தபடுகிறது. காலை 9.30 மணி முதல் பக்தா்கள் தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்படுவாா்கள்.

இதன் காரணமாக, ஏப்ரல் 28 அன்று கல்யாணோற்சவம் மற்றும் சகஸ்ரதீபாலங்கர ஆராதனைகளை ஆகிய சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.