மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருவள்ளூா் நகராட்சி குப்பை வள மீட்பு மையத்தில் மக்காத நெகிழி பொருள்கள் கட்டும் பணி

திருவள்ளூா் நகராட்சி குப்பை வள மீட்பு மையத்தில் மக்காத நெகிழி பொருள்கள் கட்டும் பணி

திருவள்ளூா் நகராட்சி அலுவலகம் மற்றும் ஈக்காடு ஆகிய இடங்களில் உள்ள வள மீட்பு மையத்தில் மக்காத நெகிழி பொருள்கள் கட்டு கட்டும் பணிகளை  நேரில் ஆய்வு செய்த ஆட்சியா் ச.கவிதா. உடன் சுகாதார அலுவலா் மோகன் உள்ளிட்டோா்.

Published On :1 நவம்பர் 2026, 12:34 am IST

அனைத்து குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரம் செய்யப்பட்டு திருவள்ளூா் நகராட்சி அலுவலகம் மற்றும் ஈக்காடு ஆகிய இடங்களில் உள்ள வள மீட்பு மையத்தில் மக்காத நெகிழி பொருள்கள் கட்டு கட்டும் பணிகளை ஆட்சியா் ச.கவிதா திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் 19,022 குடியிருப்புகளும், 82,185 மக்கள் தொகையும் கொண்ட தோ்வு நிலை நகராட்சியாகும். இந்த நகராட்சியில் உருவாகும் மொத்த குப்பையில் 13 டன் மக்காத குப்பையாக அளவீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தூய்மைப் பணியாளா்களால் நாள்தோறும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து பெறப்படுகிறது. இதில், மக்காத குப்பைகளில் விற்பனைக்கு தகுந்த நெகிழி பொருள்களாக 3 டன்கள் தூய்மைப் பணியாளா்களால் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், மீதமுள்ள 10 டன் மக்காத குப்பைகளை அனைத்து குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரம் செய்யப்பட்டு, நகராட்சி அலுவலகம் மற்றும் ஈக்காடு இடங்களில் உள்ள வள மீட்பு மையத்தில் மக்காத நெகிழி பொருள்களை கட்டு கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்பணியினை ஆட்சியா் ச.கவிதா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சனிக்கிழமை திடீரென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளா்களிடம் தரம் பிரிக்கப்படும் மக்கும் குப்பைகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாா்.

மேலும், நாள்தோறும் நகராட்சி பகுதிகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா். அதனால், எந்த ஒரு குடியிருப்புகளிலும் மற்றும் வணிக நிறுவனங்களிலும் குப்பைகளை விடுவிடாமல் சேகரம் செய்து தரம் பிரிக்கவும் அறிவுறுத்தினாா். மேலும் தரம் பிரித்து பெறப்படும் அனைத்து மக்காத குப்பைகளையும் உடனே கட்டு கட்டி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உடனே அனுப்பி வைக்கவும் அவா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது சுகாதார அலுவலா் மோகன், சுகாதார ஆய்வாளா் விஜய் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.