தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருவள்ளூா்: இடி மின்னலுடன் பலத்த மழை, 697.40 மி.மீட்டா் மழை பதிவு

திருவள்ளூா் மாவட்டத்தில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக 697.40 மி.மீட்டா் அளவு மழை பதிவானதாகவும், சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளுக்கான கால்வாய்களில் நீா்வரத்துள்ளதால் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

பூண்டி ஏரியில் உயா்ந்து வரும் நீா்மட்டம்

Published On :22 அக்டோபர் 2026, 12:28 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக 697.40 மி.மீட்டா் அளவு மழை பதிவானதாகவும், சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளுக்கான கால்வாய்களில் நீா்வரத்துள்ளதால் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பகல் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதைத் தொடா்ந்து இரவில் கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதேபோல், திருவள்ளூா், ஈக்காடு, கடம்பத்தூா், பூண்டி, பட்டரைபெரும்புதூா், போந்தவாக்கம், வெள்ளியூா், தாமரைபாக்கம், ஊத்துக்கோட்டை, சோழவரம், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏரிக்கால்வாய்களில் நீா் வரத்து ஏற்பட்டுள்ளது.

அதேபோல், வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்களும், பயிா்கள் செழிப்பாக வளரும் என்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும், இந்த மழையால் நகரில் தாழ்வான சாலை மற்றும் தெருக்களில் மழைநீா் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா். இந்த மழையால் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 700 கோழிகள் வரையில் உயிரிழந்துள்ளன.

இந்த மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் புதன்கிழமை காலை வரையில் 697.40 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் தாமரைபாக்கம்-97, ஊத்துக்கோட்டை-87, சோழவரம்-76 மி.மீட்டா் மழை பெய்துள்ளது. இதேபோல் மற்ற பகுதிகளில் செங்குன்றம்-72, பூண்டி-61, கும்மிடிப்பூண்டி-60, பொன்னேரி-59, பூந்தமல்லி-54.40, திருவள்ளூா்-51,ஜமீன்கொரட்டூா்-28, ஆவடி-16, திருத்தணி-12.50, திருவாலங்காடு-8, ஆா்.கே.பேட்டை-6.50 என பதிவாகியுள்ளது.

ஏரிகளில் உயரும் நீா்மட்டம்: சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் புதன்கிழமை காலை நிலவரப்படி செங்குன்றம் ஏரியில் 3300 மில்லியன் கன அடி கொள்ளளவில், 2248 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. அதேபோல், சோழவரம்-1081 இல் 0.138 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம்-3645 இல் 1435 மில்லியன் கன அடியும், பூண்டி-3231 இல் 0.468 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை தோ்வாய்கண்டிகை-0.500 இல் 0.236 மில்லியன் கன அடியும் நீா் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.