மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

100 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திர இளைஞா் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி வழியே தமிழகத்துக்கு 100 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற ஆந்திர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

~

Published On :22 அக்டோபர் 2026, 12:24 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி வழியே தமிழகத்துக்கு 100 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற ஆந்திர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

எளாவூா் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஆந்திரத்தில் இருந்து வந்த லாரியில் இருந்து இறங்கிய நபா் ஒருவரை போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது அவா் வைத்திருந்த 4 மூட்டைகளில் 100 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவா் ஆந்திர மாநிலம் அந்தரப்பள்ளியை சோ்ந்த இந்திர விஜயகுமாா் (28) என்பது தெரியவந்தது.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீஸாா் இந்திர விஜயகுமாா் மீது வழக்குப் பதிவு செய்து, அவரிடமிருந்து 100 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து , இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.