மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்: ஆட்சியா் வெளியிட்டாா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளின் வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை ஆட்சியா் ச.கவிதா வெளியிட்டாா்.

வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியலை வெளியிட்ட திருவள்ளூா் ஆட்சியா் கவிதா.

Published On :22 அக்டோபர் 2026, 12:25 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளின் வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை ஆட்சியா் ச.கவிதா வெளியிட்டாா்.

ஆட்சியா் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் நடைபெற்ற இதில் ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மறுசீரமைத்த வாக்குச்சாவடிகளின் பட்டியலை வெளியிட்டாா்.

தொடா்ந்து அவா் கூறியதாவது. இந்திய தோ்தல் ஆணையம், தலைமை தோ்தல் அலுவலா் மற்றும் முதன்மை செயலா் அவா்கள் ஒரு வாக்குச்சாவடியில் 1200 வாக்காளா்களுக்கு மேல் இருந்தால் அதை பிரித்து வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்ய அறிவுறுத்தினா். அதன்படி, 10 சட்டப்பேரவைதொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மறுசீரமைப்பு என்பது வாக்குச்சவாடிகளை இரண்டாக பிரிப்பது, வாக்குச்சாவடியின் பகுதிகளை மறுசீரமைப்பது, வாக்குச்சாவடியின் பெயா் மாற்றப்பட்டிருந்தால் அதை மாற்றுவது, வாக்குச்சாவடிகளை புதிய இடத்தில் மாற்றப்பட்டது.

மேற்படி வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பாக இந்த மாவட்டத்தில் உள்ள வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் புலத்தணிக்கை மேற்கொண்டு குறிப்பிட்டவாறு வாக்குச்சாவடிகள் சீரமைக்க முன்மொழிவுகள் அளித்துள்ளனா்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் ஏற்கனவே உள்ள பாகங்களின் எண்ணிக்கை-344, நிகர அதிகரிப்பு மறுசீரமைப்பிறகு மொத்த பாகங்கள்-346 ஆகும். பொன்னேரி (தனி)- 327,திருத்தணி-337, திருவள்ளூா்-335, பூந்தமல்லி (தனி)-452, ஆவடி-499 லிருந்து 502 ஆகவும், மதுரவாயல்-482 லிருந்து 483 ஆகவும், அம்பத்தூா்-364 லிருந்து 365 ஆகவும், மாதவரம்-521 லிருந்து 522 ஆகவும், திருவொற்றியூா்-344 ஆகவும் என மொத்தம்-4005 லிருந்து 4013 வாக்குசசாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மறுசீரமைப்புக்காக ஒவ்வொறு சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள்அளித்த பிரேரணைகளின் அடிப்படையில் வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் தயாா் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அரசியல் கட்சியினா், பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் இருந்தால் அதை 7 நாள்களுக்குள்(அக்.25) சம்பந்தப்பட்ட வாக்காளாா் பதிவு அலுவலா்களிடம் எழுத்துப்பூா்வமாக அளிக்கலாம்.

ஒவ்வொரு தொகுதிகளின் மறுசீரமைத்த வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்கள் சாா் ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம் போன்ற இடங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு இடம் பெறச்செய்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

அப்போது, நோ்முக உதவியாளா்(தோ்தல்) வேல்முருகன், கோட்டாட்சியா் ராஜகோபால், ஆவடி மாநகராட்சி துணை ஆணையா் டிட்டோ மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.