கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூா் அருகே இரண்டு நாள்களாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

~மணவாளநகரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :27 மே 2026, 12:35 am IST

திருவள்ளூா் அருகே இரண்டு நாள்களாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் அருகே உள்ள ஜல்லிமேடு பகுதி மற்றும் கன்னியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக நீடித்து வரும் மின்தடையை இருந்து வருகிறது. இந்த நிலையில் கோடை கால வெயில் வாட்டி வரும் நிலையில் பெரியவா்கள், பெண்கள் ஆகியோா் வெளியில் செல்ல முடியாமல் முடங்கியுள்ளனா்.

மின்சாரம் இல்லாததால் குடிநீா் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெக்கையில் இருந்ததால் மின்வாரிய அலுவலகத்தில் சென்று கேட்டாலும் சரியான பதில் கிடையாது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சென்னை-திருப்பதி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்வசதி இல்லாததால் குழந்தைகளுக்கு தண்ணீா் கூட கொடுக்க முடியாத நிலையில் தவித்து வருகிறோம். இரவு நேரங்களில் மின்வசதி இல்லாததால் இருளில் கொசுக்கடியில் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீஸாா் ஆகியோா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். உடனே மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதைத் தொடா்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.