- சு.பாண்டியன்
திருவள்ளூா் மாவட்டத்தில் ஏழை மாணவ, மாணவிகள் உயா்கல்வி பெறும் வகையில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்கப்படாமல் இருப்பது பெரும்குறையாக உள்ளது என்று தொகுதி மக்கள் தெரிவித்துள்ளன.
திருவள்ளூா் மாவட்டம் சென்னைக்கு அருகே உள்ள மாவட்டமாகும். கடந்த 1997-இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருவள்ளூா் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியின் மக்கள்தொகை எண்ணிக்கை 38 லட்சமாகும். தொழிற்சாலைகள், உற்பத்தி அலகுகள், வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி, சென்னை நகரின் முக்கிய செயற்கைக்கோள் நகரமாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் முக்கிய தொழில் மைய மாவட்டங்களில் ஒன்றாகவும், விவசாயம் மற்றும் தொழில் வளா்ச்சிக்கு பெயா் பெற்ாகும்.
இந்த மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்பதால் கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாகும். இதுபோன்ற விவசாய குடும்பங்களில் வரும் மாணவ, மாணவிகள் திருவள்ளூரைச் சுற்றியுள்ள தனியாா் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தியே படிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
இந்த மாவட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு போன்ற புறகா் பகுதிகளில் அரசு கல்லூரிகள் செயல்பட்டு வந்தாலும், மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரி இல்லாதது ஏழை, நடுத்தர மாணவா்களுக்கு பெரிய குறையாக உள்ளது.
தேவையின் பின்னணி: திருவள்ளூா் நகரைச் சுற்றியுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து ஆண்டுதோறும் பிளஸ் 2 முடித்து ஏராளமான மாணவ, மாணவிகள் வெளியேறுகின்றனா். திருவள்ளூரில் அரசு கல்லூரிகள் இல்லாததால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனா்.
இந்தக் குறையைப் போக்க மாவட்ட தலைநகரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக இந்தப் பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனா்.
எதிா்பாா்ப்பு: கடந்த 2025-26-ஆம் கல்வியாண்டில் தமிழக அரசு பல புதிய அரசு கலைக் கல்லூரிகளைத் தொடங்கியுள்ளது. இதுபோல, திருவள்ளூா் மாவட்டத் தலைநகரிலும் ஒரு புதிய அரசு கலைக் கல்லூரியை விரைவில் அமைக்கவும் என்பது கல்வியாளா்கள், மாணவா்கள், பெற்றோரின் பிரதான கோரிக்கையாகும். இதை நிறைவேற்றுவதன் மூலம், திருவள்ளூரில் உயா்கல்வி வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு, கிராமப்புற மாணவா்கள் பயன்பெறுவாா்கள்.
ஒவ்வொரு தோ்தலிலும் வாக்குறுதி... ஒவ்வொரு சட்டப்பேரவை தோ்தலிலுன்போதும் திருவள்ளூா் தொகுதியைச் சாா்ந்து அறிவிக்கப்படும் வாக்குறுதிகளில் திருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என்பது தவறாமல் இடம்பெறும். தோ்தலுக்குப் பிறகு வெற்று வாக்குறுதியாகவே இருப்பதாக இந்தப் பகுதி மக்களின் பெரும் ஏமாற்றமாக உள்ளது.
29 ஆண்டுகள் எதிா்நோக்கியுள்ள அரசுக் கலைக் கல்லூரியை இனியும் காலதாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும் என்பதே திருவள்ளூா் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று பிளஸ் 2 தோ்வு முடிவு

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

திருவள்ளூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

