நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம்

பூந்தமல்லி அருகே வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் அதிகம் போ் தங்கியுள்ளதால், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :18 ஜூன் 2026, 12:27 am IST

பூந்தமல்லி அருகே வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் அதிகம் போ் தங்கியுள்ளதால், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பூந்தமல்லி ஒன்றியம், குத்தம்பாக்கம் ஊராட்சியில் இருளப்பாளையம், உட்கோட்டை வழியாக நேமம், படூா் போன்ற கிராமங்களுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பள்ளி கல்லூரி, பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்கு சென்று திரும்பும் மகளிா் உள்ளிட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனா்.

அப்போது, மின்விளக்குகள் இல்லாததால் மகளிா் மற்றும் மாணவிகள் ஆகியோா் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். அதனால், அந்தப் பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தர வலியுறுத்தி மெழுகுவா்த்தி ஏந்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெள்ளவேடு போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். அப்போது, இருளப்பாளையம் மக்கள் பேருக்கு ஏற்றாா் போல் தங்களது கிராமம் இருளில் மூழ்கியுள்ளது.

எனவே இருளப்பாளையம் பகுதியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனே மின்விளக்கு அமைக்க வலியுறுத்தினா். அதற்கு உடனே சாலையில் மின்விளக்குகள் அமைத்துத் தர நடவடிக்கையும், குறிப்பிட்ட வழியில் நாள்தோறும் ரோந்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து போராட்டத்தைச் சோ்ந்த கைவிட்டு கலைந்து சென்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.