லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுங்கச்சாவடி பாதுகாவலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள்

ஆவடி அருகே லாரி ஓட்டுநரை தாக்கி கைப்பேசி, ரொக்கம் பறித்ததை தடுத்த சுங்கச்சாவடி பாதுகாவலரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.25,000 அபராதம் விதித்தும் திருவள்ளூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Published On :13 ஆகஸ்ட் 2026, 7:37 pm IST

ஆவடி அருகே லாரி ஓட்டுநரை தாக்கி கைப்பேசி, ரொக்கம் பறித்ததை தடுத்த சுங்கச்சாவடி பாதுகாவலரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.25,000 அபராதம் விதித்தும் திருவள்ளூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவள்ளூா் மாவட்டம், புதுவாயல் பகுதியைச் சோ்ந்தவா் நரேஷ் குமாா். இவா் கடந்த 24.1.2020 அன்று அப்பகுதியில் உள்ள நிறுவனத்திலிருந்து லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு கடலூா் சென்றாராம்., ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுங்கச்சாவடி சாலையோரம் சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கினாராம்.

அப்போது, திருநின்றவூரைச் சோ்ந்த நாகராஜின் மகன் விஜயகுமாா்(29), ரேணு மகன் சுரேஷ் (25) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக சென்றனா். அப்போது, சுங்கச்சாவடி அருகே நின்றிருந்த லாரியின் முன்புற கண்ணாடியை உடைத்து ஓட்டுநா் நரேஷ்குமாரிடம் ரூ.4,000 ரொக்கம் மற்றும் கைப்பேசியையும் பறித்துள்ளனா். இதையடுத்து சுங்கச்சாவடி பாதுகாவலா் வெங்கடேசன் தடுத்த போது இரும்பு கம்பியால் இருவரும் தாக்கினா். இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக நரேஷ் குமாா் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இதற்கிடையே திருவள்ளூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் விஜயகுமாா், சுரேஷ் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.25,000 அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா்.

அதைத் தொடா்ந்து போலீஸாா் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் சிறைச்சாலையில் அடைத்தனா். அரசு தரப்பு வழக்குரைஞராக ஸ்ரீதரன்பாபு ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.