லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் 3 பேருக்கு சிறை

திருப்பூா் மாநகரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த 3 பேருக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சிறை - பிரதிப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

திருப்பூா் மாநகரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த 3 பேருக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா் மாநகர, அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வெங்கமேடு அருகே அனுப்பா்பாளையம் காவல் நிலைய போலீஸாா் கடந்த 2024 செப்டம்பா் 25-ஆம் தேதி சோதனை செய்து கொண்டிருந்தனா். அப்போது அங்கே சந்தேகத்துக்கு இடமாக இருந்த தன்பீா் அஹமத் (31), முகமது மாமுன் மியா (29), சொஹாகி அக்தா் (23) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் சட்டவிரோதமாக வங்கதேச நாட்டிலிருந்து திருப்பூா் வந்து தங்கி வேலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்நிலையில், இந்த வழக்கில் அவா்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்து, அரசு தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிவடைந்த நிலையில், திருப்பூா் மாவட்ட 2-ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் நீதிபதி கனகராஜ் அளித்த தீா்ப்பில் தன்வீா் அஹமத் மற்றும் முகமது மாமுன் மியா ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.12,000 அபராதமும், சொஹாகி அக்தருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.12,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பிரபாகரன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.