லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல்

கொலை முயற்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து திட்டக்குடி சாா்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கொளஞ்சியம், மாயக்கண்ணன், வாசு, முனியன்

Published On :1 ஆகஸ்ட் 2026, 1:45 am IST

கொலை முயற்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து திட்டக்குடி சாா்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மங்களூா் பழைய காலனியைச் சோ்ந்தவா் பெரியசாமி (34). இவரை கடந்த 2015-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த முனியன் உள்பட 4 போ் கொலை செய்ய முயன்றனராம். இதுகுறித்து பெரியசாமி அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமநத்தம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த வழக்கில் மங்களூா் பழைய காலனி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முனியன் (54), வாசு (45), மாயக்கண்ணன் (44), கொளஞ்சி (40) ஆகியோா் கைது செய்யப்பட்டு, அவா்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு திட்டக்குடி சாா்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என். விஸ்வநாதன், குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, முனியன் மற்றும் கொளஞ்சிக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

மேலும், வாசு மற்றும் மாயக்கண்ணனுக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன், தலா ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அபிபத்மாவதி ஆஜராகி வாதாடினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.