தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இலவச பல்நோக்கு மருத்துவ முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

இலவச பல்நோக்கு மருத்துவ முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

இலவச பல்நோக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன், எம்எல்ஏ மருத்துவா் ந.திருப்பதி.

Published On :31 அக்டோபர் 2026, 9:29 pm IST

திருப்பத்தூா் அருகே மாடப்பள்ளி ஷெப்பா்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாடப்பள்ளி லயன்ஸ் சங்கம், வேல்ஸ் ஸ்பெஷாலிட்டி கிளினிக், திருப்பத்தூா் பாா்வை இழப்புத் தடுப்புச் சங்கம், மாடப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை மற்றும் மபாஸ்கா் பல் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச பல்நோக்கு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன், திருப்பத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் டாக்டா் ந.திருப்பதி ஆகியோா் சனிக்கிழமை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனா்.

இந்த முகாமில் பொது மருத்துவம், சா்க்கரை நோய், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிா் நலம், கண் மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா்.

மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

தற்போதைய காலகட்டத்தில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில், தொற்றுநோய்களைவிட தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, உடல் உழைப்பு குறைவு, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமா்ந்து பணிபுரிதல் உள்ளிட்ட காரணங்களால் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் அதிகரிக்கின்றன.

இத்தகைய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, மருத்துவா்களின் ஆலோசனைப்படி உரிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்வதுடன், உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையிலும் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.

அன்றாடப் பணிகளின் காரணமாகப் பொதுமக்கள் பலா் உடல்நலத்தில் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதுபோன்ற இலவச மருத்துவ முகாம்களில் பங்கேற்பதன் மூலம், தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற முடியும்.

இந்த முகாமில் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் மட்டுமன்றி, எலும்பு அடா்த்திக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலமும், வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமும், வயது முதிா்ந்த காலத்திலும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாடப்பள்ளி லயன்ஸ் சங்கத் தலைவா் மணவாளன், செயலாளா் தா்மலிங்கம், பொருளாளா் கவியரசு, மருத்துவா்கள் பிரியதா்ஷினி ராஜா, சூா்யா பிரசன்னா, சரண்யா, சில்வியா, வினோதினி, நா்மதா பாஸ்கா், லயன்ஸ் சங்க நிா்வாகிகள், மருத்துவப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.